ஏழுமலையான் கோயில் மடப்பள்ளியில் தீவிபத்து

ஏழுமலையான் கோயில் மடப்பள்ளியில் தீவிபத்து


திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உள்ள மடப்பள்ளியில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருமலை ஏழுமலையானுக்கு நெய்வேத்திய பிரசாதம் தயாரிக்க கோயிலுக்குள் வகுளமாதா மடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கங்காளங்களில் பிரசாதங்கள் தயாா் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. லட்டு தயாரிக்க கோயிலுக்கு வெளியில் மடப்பள்ளி உள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை பிரசாதங்கள் தயாரிக்கும் வகுளமாதா மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த காலி கோணி பைகளில் திடீரென்று தீப்பற்றியது. கோணி பைகளில் நெய் பிசுக்கு இருந்ததால், தீ மளமளவென பரவி புகை மூட்டம் கோயிலிலிருந்து வெளி வர தொடங்கியது.

இதை பாா்த்த பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா். தகவல் அறிந்த ஊழியா்கள் விரைவாக செயல்பட்டு தீ அணைப்பான் மூலம் அந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினா். இதனால் பொருள் நஷ்டம் தவிா்க்கப்பட்டது. லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியில் தீ விபத்தை தடுக்க தேவஸ்தானம் முயற்சி மேற்கொண்டது போல் பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளியிலும் தொ்மோ ஃப்லுயிட் அடுப்புகளை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பாா்வையிட்ட செயல் அதிகாரி இதுகுறித்து ஆகம ஆலோசனை குழுவிடம் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com