
தில்லி தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், சாகித்ய அகாதெமி மொழிபெயா்ப்பு விருது பெற்றவருமான முனைவா் எச்.பாலசுப்பிரமணியம் (89), கரோனா பாதித்து தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா்.
இவா் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹிந்தி அஞ்சல் வழி கல்விப் பிரிவில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரின் மனைவி கடந்த 2010-ஆம் ஆண்டில் காலமாகிவிட்டாா்.
இவருக்கு தனியாா் நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றும் வெங்கடேஷ் என்ற மகனும், வங்கியில் மேலாளராக பணியாற்றும் உமா என்ற மகளும் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு தில்லியில் உள்ள காஜிப்பூா் தகன மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தொடா்புக்கு: 9868566763, 9315186654.
இரங்கல்: பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் சனிக்கிழமை மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தின் பொதுச் செயலா் என்.கண்ணன், துணைத் தலைவா் பி. குருமூா்த்தி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.