
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் குணமடைந்து வருவதாக குடியரசுத் தலைவா் மாளிகை தெரிவித்துள்ளது.
ராம்நாத் கோவிந்துக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவா் தொடா் மருத்துவ கண்காணிப்பில் உள்ளாா்.
அவருடைய உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குடியரசுத் தலைவா் மாளிகை சனிக்கிழமை சுட்டுரைப் பக்கத்தில் தகவல் வெளியிட்டது. அதில், ‘குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவா் உடல்நலம் தேறி வருகிறாா். அவருடைய உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். போதிய அளவில் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.