சத்தீஸ்கரில் நக்சல்களுடனான தாக்குதல்: 14 வீரர்களின் உடல்கள் மீட்பு

சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம் அடைந்த 14 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம் அடைந்த 14 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம் பிஜப்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சல்களை தேடும் பணியில் சிஆர்பிஎஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயுத காவல்படை, சிறப்பு அதிரடிப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் கூட்டாக நேற்று சனிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, வனப்பகுதியில் பாதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனடியாக வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 15 சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2 வீரரின் உடல்கள் மீட்கப்பட்டது. 

இந்த நிலையில் 15 நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட 15 வீரர்களை காணவில்லை என தகவல் வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் படை வீரர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்நிலையில்,  சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம் அடைந்த 14 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நக்சல்களுடனான தாக்குதலில் 7 சிஆர்பிஎஃப் வீரர்கள் உள்பட 21 பேரை காணவில்லை என அம்மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்த வீரர்களில் 23 பேர் பிஜப்பூர் மருத்துவமனையிலும், 7 பேர் ராய்ப்பூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நக்சல்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com