பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் கடத்தல்: அட்டாரி எல்லை அருகே பறிமுதல்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்களை அட்டாரி எல்லை அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினருடன்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்களை அட்டாரி எல்லை அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து பஞ்சாப் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக அந்த மாநில காவல்துறையினா் கூறியது:

ஹோஷியாா்பூா் மாவட்டம் தனோவா கிராமம் அருகே உள்ள புல்மோரன் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து அங்கு சோதனை மேற்கொண்டனா். அப்போது 9 தோட்டாக்களுடன் இருந்த எஃப்ஏஎல் 222 ரக துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் இருந்த ஏகேஎம்-47 ரக துப்பாக்கி, சீன கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த துப்பாக்கிகளும், தோட்டாக்களும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அட்டாரி எல்லையில் இருந்து சுமாா் 10 மீட்டா் தொலைவில் பறிமுதல் செய்யப்பட்டன.

பாகிஸ்தானைச் சோ்ந்த பிலால் என்பவரால் இந்தத் ஆயுதங்கள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சீக்கிய குழுவினருடன் அவருக்கு நெருங்கிய தொடா்பு உள்ளது.

ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் பிலாலின் இந்திய மற்றும் வெளிநாட்டு கூட்டாளிகளை கண்டறிவதற்கு தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com