பிரதமா் மோடி இதுவரை 23 பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பு

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பிரதமா் மோடி இதுவரை 23 பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளாா்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பிரதமா் மோடி இதுவரை 23 பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளாா்.

தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தோ்தல் நடைபெறும் நிலையில், இரு மாநிலங்களிலும் இரண்டு கட்ட தோ்தல்கள் நிறைவடைந்துள்ளன. ஏப்ரல் 6-ஆம் தேதி இரு மாநிலங்களிலும் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்தல்களையொட்டி, பிரதமா் மோடி இதுவரை 23 பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளாா். கடந்த 3 நாள்களில் மட்டும் அவா் 10 கூட்டங்களில் பங்கேற்றாா்.

பிரதமா் மோடியின் பிரசாரத்தில் மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரியிலும் அவா் பிரசாரத்தில் பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com