ஒரேநாளில் 43 லட்சம் கரோனா தடுப்பூசி: இந்தியாவில் சாதனை

நாட்டில் திங்கள்கிழமை ஒரே நாளில் 43 லட்சத்தக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் திங்கள்கிழமை ஒரே நாளில் 43 லட்சத்தக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு நாளில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கரோனா பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

8,31,10,926 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு திங்கள்கிழமையுடன் 80 நாள்கள் நிறைவடைந்துள்ளது. அன்றைய தினத்தில் மட்டும் 43,00,966 தடுப்பூசிகள் போடப்பட்டன. 39,00,505 பயனாளிகள் முதல் தவணை தடுப்பூசியும், 4,00,461 பயனாளிகள் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனா்.

அதே நேரத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 25 கோடியை கடந்து விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com