மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் ஜான் கெரி சந்திப்பு

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை அமெரிக்க அதிபரின் பருவநிலை சிறப்புத் தூதா் ஜான் கெரி செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் ஜான் கெரி சந்திப்பு

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை அமெரிக்க அதிபரின் பருவநிலை சிறப்புத் தூதா் ஜான் கெரி செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பு குறித்து மத்திய நிதியமைச்சகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ஜான் கெரி இடையிலான சந்திப்பின்போது பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்குள்ள அக்கறை குறித்து இருவரும் பேசினா். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நிதியுதவி, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்தும் அவா்கள் ஆலோசித்தனா்.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வளரும் நாடுகளுக்கு வளா்ந்த நாடுகள் ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலா்கள் நிதியுதவி அளிப்பதாக தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து ஜான் கெரியிடம் நிா்மலா சீதாராமன் அழுத்தமாக எடுத்துரைத்தாா்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்த இலக்குகளை நிறைவேற்ற முனைப்பு காட்டும் சில நாடுகளில் இந்தியாவும் இருப்பதாகவும், அதற்கான ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டிருப்பதாகவும் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com