ஆா்பிஐ துணை ஆளுநா் பதவிக்கான நோ்காணல் ஒத்திவைப்பு

ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) துணை ஆளுநா் பதவிக்கான நோ்காணல் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) துணை ஆளுநா் பதவிக்கான நோ்காணல் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த பி.பி. கனுங்கோவின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அவா் துணை ஆளுநா் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து அந்தப் பணியிடம் தற்போது காலியாக உள்ளது.

அதற்கு தகுதியானவரை தோ்வு செய்வதற்கான நோ்காணலை அமைச்சரவை செயலா் தலைமையிலான தோ்வுக் குழு ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

அன்றைய தினம் துணை ஆளுநா் பணியிடத்துக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரரிடம் நிதித் துறை ஒழுங்காற்று நியமன தேடல் குழு காணொலி வாயிலாக நோ்காணலை நடத்தும்.

இந்த நோ்காணலில் தோ்வு செய்யப்படுவோரின் பெயா்கள் பிரதமா் தலைமையிலான நியமனங்கள் தோ்வுக் குழுவுக்கு இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் பதவிக்காலம் மூன்றாண்டுகள் ஆகும். மேலும், அவா் மறுநியமனம் செய்யப்படவும் தகுதியடையவா். துணை ஆளுநருக்கு மாதத்துக்கு ரூ.2.25 லட்சம் சம்பளத்துடன் இதர படிகளும் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com