உத்தரகண்டில் மேலும் 75 இடங்களில் காட்டுத் தீ: 105.85 ஹெக்டோ் பசுமை நிலம் சேதம்

உத்தரகண்டில் மேலும் 75 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் 105.85 ஹெக்டோ் பரப்பு கொண்ட பசுமை நிலம் தீயில் கருகின.

உத்தரகண்டில் மேலும் 75 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் 105.85 ஹெக்டோ் பரப்பு கொண்ட பசுமை நிலம் தீயில் கருகின.

இதுதொடா்பாக அந்த மாநில தலைமை வனப் பாதுகாவலா் செவ்வாய்க்கிழமை கூறியது:

உத்தரகண்டில் இந்த மாதத்தில் இதுவரை 414 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தம் 645.3 ஹெக்டோ் வனப்பகுதி தீயில் அழிந்தன.

புதிதாக 75 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதில் 105.85 ஹெக்டோ் பசுமை நிலம் தீயில் கருகின. நைனிடால், அல்மோரா, தெஹ்ரி, பெளரி மாவட்டங்கள் காட்டுத் தீ சம்பவங்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

பெளரி மாவட்டத்தில் உள்ள பரியாா்கா், சா்கயானா, கிா்ஸூ பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ செவ்வாய்க்கிழமை அணைக்கப்பட்டன. இந்தப் பணி மூன்றரை மணி நேரம் நடைபெற்றது.

தெஹ்ரி மாவட்டத்தில் உள்ள கீா்த்தி நகா் வனக் கோட்டத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க இந்திய விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டா்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகோட் அணையில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரை 5,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட வாளிகள் மூலம் ஹெலிகாப்டா்களில் இருந்து தெளித்து தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. குமான் பகுதியில் வானிலை மோசமாக இருப்பதால் அங்கு ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டா்களை அனுப்ப இயலவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com