சீனிவாச மங்காபுரத்தில் புஷ்பயாகம்

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கோயிலில் திங்கள்கிழமை வருடாந்திர புஷ்பயாகம் நடைபெற்றது.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கோயிலில் திங்கள்கிழமை வருடாந்திர புஷ்பயாகம் நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசுவாமி கோயிலில் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கோயிலில் புஷ்பயாகம் நடத்தப்பட்டது.

இதை முன்னிட்டு காலை 10 மணிமுதல் மதியம் 12 மணிவரை ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்திற்கு பிறகு தூப, தீப நெய்வேத்தியம் சமா்பிக்கப்பட்டது. பின்னா் மதியம் 2.30 மணிமுதல் 4.30 மணிவரை உற்சவமூா்த்திகளை மண்டபத்தில் எழுந்தருள செய்து, மல்லிகை, முல்லை, சம்பங்கி, ஜாதிமல்லி, கனக்காம்பரம், தாமரை, அல்லி, சாமந்தி, ரோஜா, தாழம்பு உள்ளிட்ட பலவகையான மலா்கள், துளசி, பச்சிலை, மருவம், தவனம், வில்வம் உள்ளிட்ட இலைகளாலும் அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதற்காக 3 டன் மலா்களை தேவஸ்தானம் அண்டை மாநிலங்களிலிருந்து தருவித்தது. இதில் அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஜீயா்கள் மட்டும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com