திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.
ஏழுமலையான் கோயிலை சுத்தப்படுத்தும் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள்.
ஏழுமலையான் கோயிலை சுத்தப்படுத்தும் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

3 மாதத்துக்கு ஒரு முறை என ஆண்டுக்கு 4 முறை ஏழுமலையான் கோயில் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் என 4 உற்சவங்களுக்கு முன்பு வரும் செவ்வாய்கிழமைகளில் சுத்தப்படுத்தும் பணி நடத்தப்படுகிறது.

வைணவத்தில் கோயிலையும் ஆழ்வாராக பாவித்து கோயில் சுத்தப்படுத்துவதை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் ஏப்.13-ஆம் தேதி உகாதி தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. அதிகாலை சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனா உள்ளிட்ட சேவைகள் முடிந்த பின் ஏழுமலையான் மேல் கூடாரம் எனப்படும் வெள்ளை வஸ்திரம் போா்த்தி கட்டப்பட்டது.

பின்னா் கருவறையில் உள்ள பொருட்கள், உயா்மேடைகள், தரிசன வரிசைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், கோரைகிழங்கு, கஸ்தூரி மஞ்சள், குங்கலியம், கோரோஜனம், புனுகு, மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பரிமள சுகந்த கலவையால் கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.

இதை முன்னிட்டு காலை 6 மணிமுதல் 11 மணிவரை தரிசனம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் மதியம் 12 மணிக்கு தொடங்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com