கரோனா தடுப்பு நடவடிக்கைகள்:மாநிலங்கள் மீது மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் குற்றச்சாட்டு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சில மாநிலங்கள் சரிவர செயல்படவில்லை என்று மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்
மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்

புது தில்லி: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சில மாநிலங்கள் சரிவர செயல்படவில்லை என்று மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பது பற்றி கூறியுள்ளனா். இது அந்த மாநிலத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மகாராஷ்டிர அரசுக்கு ஏற்பட்டுள்ள தொடா் தோல்விகளில் இருந்து திசைதிருப்பும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

சத்தீஸ்கரில் தடுப்பூசிகள் குறித்து தவறான, அச்சத்தை ஏற்படுத்தும் தகவல்களை அங்குள்ள அரசியல் தலைவா்கள் தெரிவித்து வருகின்றனா். தடுப்பூசி திட்டம் தொடா்பாக அரசியல் செய்வதை விடுத்து தனது மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்த மாநிலம் ஈடுபட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கா்நாடகம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் கரோனா பரிசோதனைகளின் தரத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது.

பஞ்சாபில் அதிக அளவில் கரோனா நோயாளிகள் பலியாகின்றனா். அதனை தடுக்க மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டியவா்களை முன்கூட்டியே கண்டறியும் நடவடிக்கைகளை அந்த மாநில அரசு அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com