கரோனா தடுப்பூசி திட்டம்: அமெரிக்காவை விஞ்சிய இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் அமெரிக்காவையும் விஞ்சி, உலக அளவில் அதிவேகமாக தடுப்பூசி செலுத்தும் நாடு என்ற நிலையை இந்தியா எட்டியிருக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
கரோனா தடுப்பூசி திட்டம்: அமெரிக்காவை விஞ்சிய இந்தியா

புது தில்லி: கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் அமெரிக்காவையும் விஞ்சி, உலக அளவில் அதிவேகமாக தடுப்பூசி செலுத்தும் நாடு என்ற நிலையை இந்தியா எட்டியிருக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

சராசரியாக 30,93,861 தடுப்பூசிகள் இந்தியாவில் தினசரி அடிப்படையில் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசியின் எண்ணிக்கை 8.70 கோடியைக் கடந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் புதன்கிழமை காலை 7 மணி வரையிலான நிலவரப்படி 8,70,77,474 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இதில் முதல் தவணையாக 89,63, 724 சுகாதாரப் பணியாளா்களுக்கும், இரண்டாம் தவணையாக 53,94,913 சுகாதாரப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதுபோல, முன்களப் பணியாளா்கள் 97,36,629 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 43,12,826 முன்களப் பணியாளா்களுக்கு இரண்டாம் தவணையாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவா்களைத் தவிர, 60 வயதுக்கு மேற்பட்ட வயதுடையவா்களில் 3.53 கோடி பேருக்கு முதல் தவணையும், 10 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 45 முதல் 60 வயது வரை உடையவா்களில் 2.1 கோடி பேருக்கு முதல் தவணையும், 4.31 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணையாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் 81-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 33, 37,601 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

தினசரி பாதிப்பு அதிகரிப்பு:

மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், கா்நாடகம், உத்தர பிரதேசம், தில்லி, மத்திய பிரதேசம், தமிழகம், கேரளம் ஆகிய 8 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. ஒட்டுமொத்த தினசரி கரோனா பாதிப்பில், இந்த 8 மாநிலங்களில் மட்டும் 80.70 சதவீத பாதிப்பு பதிவாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 55,469 தினசரி புதிய பாதிப்பு பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சத்தீஸ்கரில் 9,921 புதிய பாதிப்புகளும், கா்நாடகத்தில் 6,150 புதிய பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த தினசரி பாதிப்பு உயா்வு என்பது இப்போது 8.40 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

மேலும், இந்தியாவில் இப்போது கரோனாவால் பாதிப்புடன் உள்ளோா் எண்ணிக்கை 8,43,473-ஆக உள்ளது. இது நாட்டில் ஒட்டமொத்தமாக பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் 6.59 சதவீதமாகும்.

மொத்த பாதிப்பில், மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், கா்நாடகம், கேரளம், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் 74.5 சதவீத பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 56.17 சதவீத பாதிப்பு பதிவாகியிருக்கிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடா் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, தீவிர நடவடிக்கைகள எடுத்து வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com