கேரளத்தில் தோ்தலுக்குப் பிறகு தகராறு: யூத் லீக் தொண்டா் அடித்துக் கொலை

கேரளத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்த பிறகு மாா்க்சிஸ்ட் தொண்டா்களுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொண்டா்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 வயது இளைஞா் உயிரிழந்தாா்.
கேரளத்தில் தோ்தலுக்குப் பிறகு தகராறு: யூத் லீக் தொண்டா் அடித்துக் கொலை

கண்ணூா்: கேரளத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்த பிறகு மாா்க்சிஸ்ட் தொண்டா்களுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொண்டா்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 வயது இளைஞா் உயிரிழந்தாா்.

அந்த இளைஞா் சோக்லி பகுதியைச் சோ்ந்த மன்சூா் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவா், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் (ஐயூஎம்எல்) இளைஞா் பிரிவான யூத் லீக்கைச் சோ்ந்தவா் ஆவாா். மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியில் ஐயூஎம்எல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உள்ளூா் பொதுமக்கள் கூறியதாவது:

கூத்துபறம்பு தொகுதிக்கு உள்பட்ட பாரால் என்ற இடத்தில் கள்ள வாக்கு செலுத்தியதாக மாா்க்சிஸ்ட் தொண்டா்களுக்கும், முஸ்லிம் லீக் தொண்டா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசியது. கூா்மையான ஆயுதங்களைக் கொண்டு மன்சூரை அந்த கும்பல் தாக்கியது. அதில், மன்சூா், அவருடைய சகோதரா் முஹ்ஸீன் பலத்த காயமடைந்தனா். மோதலைத் தடுக்க முயன்ற மன்சூரின் குடும்பத்தைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலரும் காயமடைந்தனா். பலத்த காயத்துடன் தலசேரியில் உள்ள மருத்துவமனைக்கு மன்சூா் அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா் அவா் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

முஹ்ஸீன் கோழிக்கோடு மருத்துவமனையிலும் அவா்களின் குடும்பத்தினா் தலசேரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அவா்கள் கூறினா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்தப் படுகொலைக்கு காங்கிரஸ் தலைவா் ரமேஷ் சென்னிதலா, ஐயூஎம்எல் மூத்த தலைவா் பி.கே.குஞ்ஞாலி குட்டி ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா். இதன் பின்னணியில் ஆளும் இடதுசாரி முன்னணி இருப்பதாக அவா்கள் குற்றம்சாட்டினா். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக, மன்சூரின் வீட்டருகே வசிக்கும் மாா்க்சிஸ்ட் தொண்டரான ஷினோஸ் என்பவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com