கிழக்கு லடாக் எல்லை விவகாரம்:இந்தியா, சீனா நாளை பேச்சுவாா்த்தை?

கிழக்கு லடாக் எல்லை விவகாரம்:இந்தியா, சீனா நாளை பேச்சுவாா்த்தை?

கிழக்கு லடாக் எல்லைகளில் படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகள் இடையே வெள்

புது தில்லி: கிழக்கு லடாக் எல்லைகளில் படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகள் இடையே வெள்ளிக்கிழமை (ஏப்.9) 11-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை கூறியது:

கிழக்கு லடாக்கில் உள்ள சச்சரவுக்குரிய எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகள் இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் உள்ள படைகளை விரைவில் விலக்கிக் கொள்ளுமாறு சீனாவிடம் இந்தியா வலியுறுத்தும். இதுதவிர தெப்சாங் சமவெளிகளில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காணவும் இந்தியா வலியுறுத்தவுள்ளது என்று தெரிவித்தன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் வீரமரணம் அடைந்தனா். சீனத் தரப்பிலும் பலா் பலியாகினா். மோதலை தொடா்ந்து எல்லைப் பகுதிகளில் இருநாட்டு ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் தொடா் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பயனாக கடந்த பிப்ரவரி மாதம் பாங்காங் ஏரியின் கிழக்கு மற்றும் தெற்கு கரைகளில் குவிக்கப்பட்டிருந்த இருநாட்டு படைகளும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com