பொதுமுடக்க அச்சம்: குஜராத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

கரோனா தொற்று திடீரென அதிகரித்ததையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தோடு குஜராத் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். 
கரோனா அச்சம்: குஜராத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்
கரோனா அச்சம்: குஜராத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

கரோனா தொற்று திடீரென அதிகரித்ததையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தோடு குஜராத் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதித்து வருகின்றனர். 

அதன்படி, குஜராத் மாநிலத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே, மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கபட்டுவிடுமோ என்று அச்சத்தால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். 

அதிலும், மிகவும் பாதிக்கப்பட்ட 2 நகரங்களான சூரத் மற்றும் அகமதாபாத்தை விட்டுப் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு வெளியேறத் தொடங்கியுள்ளனர். 

புலம்பெயர் தொழிலாளர்களில் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதைத் தடுக்க முடியாது என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் விபுல் மித்ரா கூறுகையில், 

புலம்பெயர் தொழிலாளர்கள் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால், மக்கள் நாட்டில் எங்கும் செல்ல சுதந்திரமாக உள்ளனர். சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்கிறார்கள் என்றாலும், இது பெரிய அளவில் நடப்பதில்லை என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, திடீரென பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியேறியவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருவதாக அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com