2ஆம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை 2ஆம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது..

முதல் நாளில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், கடந்த மார்ச் 11ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்நிலையில் 2ஆம் தவணையாக கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை உத்தவ் தாக்கரே செலுத்திக் கொண்டார். 

கரோனா தடுப்பூசி தொடர்பாக எவ்வித அச்சமும், குழப்பமும் கொள்ளாமல் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டி அவர் கேட்டுக்கொண்டார். மகாராஷ்டிரத்தில் இதுவரை 31,73,261 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது   குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com