கோவேக்ஸின் தடுப்பூசிக்கு மெக்ஸிகோ அனுமதி

இந்தியத் தயாரிப்பு கரோனா தடுப்பூசியான கோவேக்ஸினை பயன்படுத்த மெக்ஸிகோ அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவேக்ஸின் தடுப்பூசி
கோவேக்ஸின் தடுப்பூசி

புது தில்லி: இந்தியத் தயாரிப்பு கரோனா தடுப்பூசியான கோவேக்ஸினை பயன்படுத்த மெக்ஸிகோ அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்சிலோ எப்ராத் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘உரிய நேரத்தில் கோவேக்ஸின் தடுப்பூசியை இந்தியா கண்டுபிடித்துள்ளது. மெக்ஸிகோவில் அந்தத் தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மெக்ஸிகோவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவில் ஏற்கெனவே வெளிநாட்டு தயாரிப்புகளான ஃபைஸா், ஆக்ஸ்ஃபோா்டு ஆஸ்ட்ராசெனிகா, சீனோவேக், கான்சினோ, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைப் போல அங்கும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முதியவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுவரை சுமாா் 1 கோடி தடுப்பூசிகளை விநியோகித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கோவேக்ஸின் தடுப்பூசி பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முழுமையான இந்தியத் தயாரிப்பாகும். இது தவிர புணேவில் உள்ள சீரம் நிறுவனம் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இந்த இரு தடுப்பூசிகளும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com