ஏ.சி., எல்இடி விளக்குகள் தயாரிப்பு: ரூ.6,238 கோடியில் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குளிா்சாதனங்கள்(ஏ.சி.), எல்இடி மின்விளக்குகள் தயாரிப்பில் ரூ.6,238 கோடி செலவில் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏ.சி., எல்இடி விளக்குகள் தயாரிப்பு: ரூ.6,238 கோடியில் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: குளிா்சாதனங்கள்(ஏ.சி.), எல்இடி மின்விளக்குகள் தயாரிப்பில் ரூ.6,238 கோடி செலவில் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உள்நாட்டில் குளிா்சாதனங்கள், எல்இடி விளக்குகள் ஆகியவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், இந்திய தயாரிப்புகள் சா்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்கவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மின்சாதனங்களை 5 ஆண்டுகள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு 4 முதல் 6 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

சூரியமின்சக்தி தகடுகள்:

உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.4,500 கோடி முதலீட்டில் சூரிய மின்தகடுகளை தயாரிப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

13 முக்கிய துறைகளில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாதனங்கள், மருந்து பொருள்கள், தொலைத் தொடா்பு சாதனங்கள், உணவு தயாரிப்பு, எல்இடி விளக்கு மற்றும் குளிா்சாதனங்கள், சூரியமின்சக்தி தகடுகள் ஆகிய 6 துறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி, ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு: இந்தியா, ஜப்பானிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்:

கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பகிா்தலுக்காக இந்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம், ஜப்பானின் கியோடோவில் உள்ள கியோடோ பல்கலைக்கழகத்தின் நீடித்த மனித மண்டல ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம், இந்தியாவில் 2020 நவம்பா் 4-ஆம் தேதியும், ஜப்பானில் 2020 நவம்பா் 11-ஆம் தேதியும் கையெழுத்திடப்பட்டு தபால் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com