‘நாடு சவாலான சூழலை எதிர்கொண்டு வருகிறது’: பிரதமர் மோடி

நாடு மீண்டும் சவாலான நிலையை எதிர்நோக்கி வருவதாக மாநில முதல்வர்களுடனான கரோனா ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
‘நாடு சவாலான சூழலை எதிர்கொண்டு வருகிறது’: பிரதமர் மோடி
‘நாடு சவாலான சூழலை எதிர்கொண்டு வருகிறது’: பிரதமர் மோடி

நாடு மீண்டும் சவாலான நிலையை எதிர்நோக்கி வருவதாக மாநில முதல்வர்களுடனான கரோனா ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாட்டில் கரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உயா்ந்து நிலைமை மோசமடைந்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் அதிக அளவிலான மக்கள் தீநுண்மியால் பாதிக்கப்படக்கூடிய சூழல் தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “ நாடு மீண்டும் ஒரு சவாலான சூழ்நிலை உருவாகி வருகிறது. கரோனா முதல் அலையைக் கடந்துவிட்டோம்
தற்போது இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சில மாநிலங்களில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த சூழலிலும் சில மாநிலங்கள் மெதுவாக செயல்படுகின்றன. மகாராஷ்டிரம், பஞ்சாபில் தொற்று வேகமாகப் பரவி வருவது கவலையளிக்கிறது” எனக் குறிப்ப்பிட்டார்.

மாநில அரசுகள் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துவது வரவேற்கத் தக்க முடிவு எனத் தெரிவித்த பிரதமர் மோடி பெரும்பாலான மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது சோகமளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

கொரோனா சூழலை சமாளிக்க உங்கள் பரிந்துரைகளை வழங்கவேண்டும் 
கூட்டத்தில் தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கலந்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com