சிபிஐ விசாரணைக்கு எதிரான அனில் தேஷ்முக் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

தன் மீதான குற்றச்சாட்டுக்கு சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கு எதிராக மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கேளிக்கை விடுதிகள், உணவகங்களில் மாதந்தோறும் ரூ. 100 கோடி வசூலிக்குமாறு காவல் துறை அதிகாரிகளிடம் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக பரம்வீர் சிங் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பரம்வீர் சிங் உள்பட பலர் மனுத் தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து, 15 நாள்களுக்குள் முதல்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, தனது பதவியை ராஜிநாமா செய்த அனில் தேஷ்முக் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் முறையிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அனில் தேஷ்முக்கின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com