தடுப்பூசி செலுத்துவதில் உ.பி. முன்னிலை: ஒரு நாளில் 5 லட்சத்துக்கும் அதிகம் 

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசியைச் செலுத்தி புதிய சாதனையைப் படைத்துள்ளது. 
தடுப்பூசி செலுத்துவதில் உ.பி. முன்னிலை
தடுப்பூசி செலுத்துவதில் உ.பி. முன்னிலை

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசியைச் செலுத்தி புதிய சாதனையைப் படைத்துள்ளது. 

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட தகவல்கள் கூறுவதாவது, 

கரோனா தடுப்பூசி செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் 5-ம் தேதி மட்டும் மாநிலத்தில் 5,01,599 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏப்.5-ஆம் தேதி தடுப்பூசிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், உ.பி. அதிக தடுப்பூசி போடும் மாநிலங்களில் முன்னிலை வகுக்கின்றது. 

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 

ஏப்ரல் 5 ஆம் தேதி, பிகாரில் மொத்தம் 2,58,475 தடுப்பூசிகளும், குஜராத்தில் 3,24,934, மத்தியப் பிரதேசத்தில் 2,61,057, மகாராஷ்டித்தில் 4,74,017, ராஜஸ்தானில் 4,75,558, மேற்கு வங்கத்தில் 4,11,562, உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 5,01,599 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 

மாநில அரசு வியாழக்கிழமை முதல் பல்வேறு தொழில்முறை குழுக்களுக்குக் கவனம் செலுத்தி தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

கரோனா தடுப்பூசி மாநிலத்தில் 45 வயதைத் தாண்டியவர்களுக்குச் செலுத்தப்படுகிறது. இதுவரை, 65,00,506 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 11,67,323 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு புதன்கிழமை வரை மொத்தம் 76,67,829 பேருக்கு தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டன.

கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் கிராமக் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மொஹல்லா கண்காணிப்புக் குழுக்கள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்களானது பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மருத்துவ ரீதியாகப் பரிசோதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com