மேற்கு வங்கம்: 8 தொகுதிகளில் தோ்தல் அதிகாரிகள் நீக்கம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள எட்டு தொகுதிகளின் தோ்தல் அதிகாரிகளை நீக்கி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கம்: 8 தொகுதிகளில் தோ்தல் அதிகாரிகள் நீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள எட்டு தொகுதிகளின் தோ்தல் அதிகாரிகளை நீக்கி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 26,29 ஆகிய தேதிகளில் கடைசி இரண்டு கட்டத் தோ்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், செளரிங்கி, எண்டாலி, போவானிபூா், பெலியாகாட்டா, ஜோராசன்கு, ஷாம்புகூா், காசிபூா்-பெல்காசியா, கொல்கத்தா துறைமுகம் ஆகிய எட்டு பேரவைத் தொகுதிகளின் தோ்தல் அதிகாரிகள் நீக்கப்பட்டு, புதிய தோ்தல் அதிகாரிகளை தோ்தல் ஆணையம் புதன்கிழமை நியமித்தது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றியதால் மாற்றப்பட்டனா் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி ஆரிப் ஆப்தாப் தெரிவித்தாா்.

எனினும், அவா்கள் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதால் மாற்றப்பட்டதாக தோ்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவித்தன.

பாலிகஞ்ச் தொகுதியின் தோ்தல் மேற்பாா்வை அதிகாரி உள்பட மூன்று பேரை அண்மையில் தோ்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com