நாள் ஒன்றுக்கு 34 லட்சம் கரோனா தடுப்பூசி: உலக அளவில் இந்தியா முன்னிலை


புது தில்லி: நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் மூலம் உலக அளவில் தடுப்பூசிகள் செலுத்துவதில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: வியாழக்கிழமை காலை 7 மணி வரையிலான புள்ளிவிவரத்தின்படி இதுவரை 13,77,304 முகாம்களில் ஒட்டுமொத்தமாக 9,01,98,673 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதாரப் பணியாளா்கள் 89,68,151 பேரும், முன்களப் பணியாளா்கள் 97,67,538 பேரும், இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதாரப் பணியாளா்கள் 54,18,084 பேரும், முன்களப் பணியாளா்கள் 44,11,609 பேரும் அடங்குவா்.

தவிர 60 வயதுக்கு மேல்பட்டவா்களில் முதல் கட்டமாக 3,63,32,851 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 11,39,291 பேருக்கும் தடுப்பூசி செலுத்த்தப்பட்டுள்ளது. 45 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்டவா்களில் முதல் கட்டமாக 2,36,94,487 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 4,66,662 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் நாள் ஒன்றுக்கு அதிகம் தடுப்பூசிகள் செலுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 34,30,502 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 60 சதவீதம் தடுப்பூசிகள் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடகம், மத்திய பிரதேசம், கேரளம் ஆகிய எட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதிமுதல் கரோனாவுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் உலக அளவில் அதிகம் தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்தியா ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 82-ஆம் நாளான ஏப்ரல் 7 ஆம் தேதியின்படி 29,79,292 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 38,760 முகாம்களில் 26,90,031 பேருக்கு முதல் கட்டமாகவும், மீதம் 2,89,261 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com