‘84 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது’: மத்திய அமைச்சர்

இந்தியாவில் இருந்து இதுவரை 84 நாடுகளுக்கு 6 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

கரோனா தொற்று அதிகரித்துவருவதன் மத்தியில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இதுவரை 84 நாடுகளுக்கு 6 கோடியே 45 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் இதுவரை முன்களப் பணியாளர்கள் 98 லட்சம் பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசியையும், அவர்களில் 45 லட்சம் பேர் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நாட்டில்9 கோடியே 43 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com