கரோனா எதிரொலி: மும்பையில் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தம்

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மிகப் பெரிய ரயில் நிலையங்களில், நடைமேடை டிக்கெட் விற்பனையை மத்திய ரயில்வே நிறுத்திவிட்டது.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நடைமேடையில் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூர விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், கல்யாண், தானே, தாதர், பான்வெல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது.

கடந்த ஆண்டு, நடைமேடைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் நடைமேடை டிக்கெட் விலையை பத்து ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com