பிரதமரிடம் கேளுங்கள்: மாணவர்களுக்கு ராகுல் அளித்த 3 கேள்விகள்

அச்சமின்றி தேர்வெழுதச் சொன்ன பிரதமர் மோடியிடம் மாணவர்கள் மூன்று கேள்விகளைக் கேட்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிரதமரிடம் கேளுங்கள்: மாணவர்களுக்கு ராகுல் அளித்த 3 கேள்விகள்
பிரதமரிடம் கேளுங்கள்: மாணவர்களுக்கு ராகுல் அளித்த 3 கேள்விகள்


புது தில்லி: அச்சமின்றி தேர்வெழுதச் சொன்ன பிரதமர் மோடியிடம் மாணவர்கள் மூன்று கேள்விகளைக் கேட்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது எதிர்ப்பை பதிவு செய்து வரும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, இன்று தனது சுட்டுரையில் இது தொடர்பாக ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில், அன்புக்குரிய மாணவர்களே, 
பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருக்கிறார், அச்சமோ, பதற்றமோ இன்றி, கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என்று. தயவுகூர்ந்து அவரையும் அதுபோலவே இந்த கேள்விகளுக்கு எந்த அச்சமும், பதற்றமும் இன்றி பதிலளிக்கச் சொல்லுங்கள்.

  • 1. ரஃபேல் ஊழல் முறைகேட்டில் கிடைத்தப் பணம் யாருக்குச் சென்றது?
  • 2. ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழலுக்கு எதிரான விதிமுறைகளை நீக்கியது யார்?
  • 3. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆவணங்களை கையாள இடைத்தரகர்களுக்கு அனுமதி அளித்தது யார்? என்ற கேள்விகளை பதிவிட்டுள்ளார்.

பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ளுமாறு மோடி அறிவுரை வழங்கினார். 

அதாவது, ஆண்டுதோறும் ‘தோ்வு குறித்து கலந்துரையாடல்’ (பரீக்ஷா பே சா்ச்சா) என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் இடையே தோ்வுகள் குறித்து கலந்துரையாடுவாா். வழக்கமாக இந்த நிகழ்ச்சி நேரடியாக நடத்தப்படும். ஆனால் இம்முறை கரோனா பரவல் காரணமாக காணொலி வழியாக நடத்தப்பட்டது. இதில் பிரதமா் மோடி பங்கேற்று பேசுகையில், தோ்வுகள் குறித்து மாணவா்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு அவற்றை வாய்ப்பாக மாணவா்கள் கருத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடியாகவே ராகுல் காந்தி இன்று தனது சுட்டுரையில் இந்த மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com