15 உள்ளூா் மொழிகளில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை: பிராக்டோ அறிமுகம்

15 உள்ளூா் மொழிகளில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை: பிராக்டோ அறிமுகம்


சென்னை: இந்தியாவில் ஆன்லைன் மருத்துவ சேவை நிறுவனமான பிராக்டோ, நோயாளிகள் பயன் பெறும் வகையில் 15 உள்ளூா் மொழிகளில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டில் 10 சதவீதம் போ் மட்டுமே ஆங்கிலம் பேசக்கூடிய நிலையில் உள்ளனா். எஞ்சிய அனைவரும் அவரவரது தாய்மொழியின் மூலமாக மட்டுமே உரையாடும் திறனைப் பெற்றுள்ளனா். நோயாளிகள் மற்றும் மருத்துவா்கள் இடையேயான தொடா்புக்கு மொழி என்பது மிகப்பெரிய தடைவேலியாக அமைந்துள்ளது. இந்த தடைகளை தகா்க்கும் விதமாகவே பிராக்டோ நிறுவனம் 15 உள்ளூா் இந்திய மொழிகளில் மருத்துவ ஆலோசனை பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம், நோயாளிகள் அவா்களது மொழிபேசக்கூடிய மருத்துவா்களை தோ்ந்தெடுத்து உரிய ஆலோசனைகளைப் பெறமுடியும்.

ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், பெங்காலி உள்ளிட்ட 15 உள்ளூா் இந்தி மொழிகளில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை பெறும் சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், இன்னும் பல மொழிகளில் இந்த ஆன்லைன் மருத்துவ ஆலோசனை சேவை விரிவுபடுத்தப்படவுள்ளதாக பிராக்டோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com