கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 9.80 கோடியைத் தாண்டியது 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 9.80 கோடியைத் தாண்டியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
கரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவர்களின் எண்ணிக்கை 9.80 கோடியைத் தாண்டியது 
கரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவர்களின் எண்ணிக்கை 9.80 கோடியைத் தாண்டியது 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 9.80 கோடியைத் தாண்டியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 

உலகளாவிய கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், முக்கிய மைல்கல்லாக கரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. 

அந்தவகையில், இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி இதுவரை 
14,75,410 அமர்வுகளில் 9.80 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

இதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு 89,88,373 முதல் டோஸும்,  54,79,821 பேருக்கு இரண்டாவது டோஸும் வழங்கப்பட்டுள்ளது. 
முன்களப் பணியாளர்களுக்கு 98,67,330 பேருக்கு முதல் டோஸும், 45,59,035 பேருக்கு இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளது. 

மேலும்,  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,82,55,044 (முதல் டோஸ்) மற்றும் 45 முதல் 60 வயதுடையவர்கள் 5,82,064 (இரண்டாவது டோஸ்) செலுத்தப்பட்டது. 

நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளில் 60.62 சதவீதம் 8 மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது. 

தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையில் 84-ம் நாளான (ஏப்ரல் 9) 9,34,15,055 பயனாளிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இதில் 46,207 பேருக்கு முதல் டோஸும், 4,09,018 பேருக்கு இரண்டாம்  டோஸும் போடப்பட்டது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று பாதித்து 794 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 34 லட்சம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com