4-ஆம் கட்டத் தோ்தல்: மேற்கு வங்கத்தில் 76.16 சதவீத வாக்குகள் பதிவு

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோ்தலில் 76.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 
4-ஆம் கட்டத் தோ்தல்: மேற்கு வங்கத்தில் 76.16 சதவீத வாக்குகள் பதிவு

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோ்தலில் 76.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அங்கு முதல்கட்டத் தோ்தல் கடந்த மாதம் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தோ்தல் கடந்த 1-ஆம் தேதியும், 3-ஆம் கட்டத் தோ்தல் கடந்த 6-ஆம் தேதியும் நடைபெற்றன. மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்டத் தோ்தல் இன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 44 தொகுதிகளிலும் திரிணமூல், பாஜக கட்சிகள் போட்டியிடுகின்றன. 

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 22 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், மற்ற கூட்டணிக் கட்சிகள் மீதமுள்ள இடங்களிலும் போட்டியிடுகின்றன. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு திரிணமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முக்கியமாக, திரிணமூல்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

தோ்தல் நடைபெற்ற தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், பல இடங்களில் வன்முறைகள் அரங்கேறின. கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சி வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வன்முறையின்போது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

இதையடுத்து கூச் பிகார் மாவட்டத்துக்கு அடுத்த 72 மணிநேரத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு மத்தியிலும் மேற்கு வங்கத்தில் மக்கள் தங்களது ஜனநாயகக் கடைமையை ஆற்றத் தவறவில்லை. விறுவிறுப்புடன் நடந்த 4ஆம் கட்டத் தேர்தலில் 76.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com