தடுப்பூசி திருவிழா: மக்களுக்கு பிரதமர் மோடியின் 4 முக்கிய வேண்டுகோள்!

நாடு முழுவதும் இன்று முதல் நான்கு நாள்களுக்கு கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி, மக்களுக்கு 4 முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார். 
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாடு முழுவதும் இன்று முதல் நான்கு நாள்களுக்கு கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி, மக்களுக்கு 4 முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை நான்கு நாள்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி, ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தப்படும் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 

இந்நிலையில் கரோனா தடுப்பூசி திருவிழா குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு மிக முக்கியான 4 வேண்டுகோள்களை விடுத்துள்ளர். 

1. தடுப்பூசி போடும் ஒவ்வொருவரும் படிக்காத அல்லது குறைவாக படித்தவர்களுக்கு தடுப்பூசி போட உதவுங்கள். 

2. கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை கிடைக்க உதவுங்கள். 

3. ஒவ்வொருவரும் முகக்கவசத்தை அணியுங்கள்; அது மற்றவரின் உயிரைக் காப்பாற்ற உதவும். 

4. கரோனா தொற்று பதிவான பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளை வகைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com