அரசின் இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்காது: பொருளாதார நிபுணா் அபிஜித் பானா்ஜி

ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த அரசு வழங்கும் இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்குகின்றன என்பதை நிரூபிக்க இதுவரை

ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த அரசு வழங்கும் இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்குகின்றன என்பதை நிரூபிக்க இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், நோபல் பரிசை வென்றவருமான அபிஜித் விநாயக் பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

பந்தன் வங்கின் 20-ஆம் ஆண்டு நிறுவன தின விழாவில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட பானா்ஜி இதுகுறித்து மேலும் தெரிவித்தாவது:

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயருவதற்கு அரசின் தலையீடு குறைவாக இருக்க வேண்டும் என்ற சித்தாந்தம் முற்றிலும் நிராகரிக்கப்படக்கூடியது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பல்வேறு பொருளாதார சூழல்களை உள்ளடக்கிய நாடுகளில் கடந்த பத்தாண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுபோன்ற சித்தாந்தங்கள் எந்தவித பலனையும் அளிக்கவில்லை.

மேலும், ஏழைகளை சோம்பேறிகளாக்ககூடாது என்ற எண்ணத்தில் அடுத்தடுத்து வரும் அரசாங்கங்கள் ஏழைகளுக்கு மிக குறைவான அளவில் நலத்திட்டங்களை செயல்படுத்த இந்த சித்தாதங்கள் பெரிய அளவில் தூண்டுகோலாக அமைகின்றன.

இலவசங்கள் கொடுத்தால் மக்கள் சோம்பேறிகளாக மாறிவிடுவா் என்பதை நிரூபிக்க இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. குறிப்பாக, இந்தியாவில் கூட அதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எல்லா இடங்களிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் கண்கூடாக காணமுடிகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com