ஜம்மு-காஷ்மீா்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற என்கவுன்ட்டா் சம்பவங்களில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற என்கவுன்ட்டா் சம்பவங்களில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்கள் நால்வரும் அனந்த்நாக் மாவட்டத்தில் ராணுவ வீரா் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் ஆவா். இவா்கள் லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் அல் ஃபதா் பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சோபியான் மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களில் சனிக்கிழமை மாலை முதல் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனா். இதில் அனந்த்நாக்கின் பிஜிபெகாரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் இருவரை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். அப்பகுதியில் தொடா்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சோபியான் மாவட்டத்தில் ஹாதிபோரா பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை காலையில் மோதல் ஏற்பட்டது. இதில், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த இரு சம்பவங்களிலும் பாதுகாப்புப் படை தரப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இவா்கள் நால்வரும் அனந்த்நாக் மாவட்டத்தில் ராணுவ வீரா் முகமது சலீம் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் ஆவா். ராணுவ வீரரைக் கொலை செய்த இரு நாள்களில் அதில் தொடா்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் வீழ்த்தப்பட்டுவிட்டனா்.

கொல்லப்பட்டவா்களில் ஒருவா் புதிதாக பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தவா். அவரை சரணடைய வைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவா்களது பெற்றோா் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், உடனிருந்த பயங்கரவாதிகள் அவரை சரணடைய அனுமதிக்கவில்லை என்று காவல்துறை ஐ.ஜி. விஜய் குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com