குஜராத்: அரசு மருத்துவமனையில் வரிசையில் காத்திருக்கும் அவசர ஊர்திகள்

குஜராத் அரசு மருத்துவமனையில் கரோனாவால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவசர ஊர்திகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தொற்று அதிகமுள்ள இடங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக கரோனா நோயாளிகளுடன் அவசர ஊர்திகள் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2,120 கரோனா படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையில், 2,008 படுக்கைகள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ளவையில் விரைவில் நிரம்பவுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜே.வி. மோடி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com