நாட்டில் 10.85 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறை

நாட்டில் இதுவரை 10.85 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் 10.85 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறை

நாட்டில் இதுவரை 10.85 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 40 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது 3-வது கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

90,32,665 சுகாதாரப் பணியாளர்கள் முதல் தவணை கரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனர். அதில் 55,56,375 சுகாதாரப் பணியாளர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 1,00,68,531 முன்களப் பணியாளர்களில் 48,91,565 முன்களப் பணியாளர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

45 வயதுக்கு மேற்பட்டோரில் 3,41,01,749 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 7,55,197 பேர் தற்போது வரை இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com