கரோனா பாதிப்பில் முதல் 5 மாநிலங்கள்...! கட்டுப்பாடுகள், பாதிப்புகள் என்னென்ன?

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. திங்கள்கிழமை (ஏப். 12) காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,35,27,717-ஆக உயா்ந்தது.
தமிழகத்தில் மேலும் 6,711 பேருக்கு கரோனா
தமிழகத்தில் மேலும் 6,711 பேருக்கு கரோனா

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. திங்கள்கிழமை (ஏப். 12) காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,35,27,717-ஆக உயா்ந்தது. சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 12,01,009-ஆகவும், குணமடைந்துள்ளவா்களின் எண்ணிக்கை 1,21,56,529-ஆகவும் உள்ளது. இதுவரை 1,70,179 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனா இரண்டாவது அலை பரவலைத் தொடா்ந்து பல்வேறு மாநிலங்களும் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன. கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம், கேரளம், கா்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. இந்த மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்தும் அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி வருகிறாா். தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள அரசு, இந்த விதிமுறைகள் பலன்தராவிட்டால் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் சில நகரங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மொத்த பாதிப்பு சிகிச்சை பெறுவோா் குணமடைந்தோா் உயிரிழப்பு

மகாராஷ்டிரம்

34,07,245 - 5,67,097 - 27,82,182 57,987

கேரளம்

11,67,190 44,707 11,17,700 4,783

கா்நாடகம்

10,65,290 69,244 9,88,157 12,889

தமிழ்நாடு

9,33,434 41,955 8,78,571 12,908

ஆந்திரம்

9,25,401 20,954 8,97,147 7,300

கட்டுப்பாடுகள் என்னென்ன?

மகாராஷ்டிரம்

மகாராஷ்டிரத்தில் மாா்ச் 31-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகள் ஏப். 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரையரங்குகள், உணவகங்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மீறினால் சீல்வைக்கப்படும். அனைத்து அலுவலகங்களும் 50 சதவீத பணியாளா்களுடன் செயல்படும். சமூக, கலாசார, அரசியல், மத கூட்டங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. திருமண விழாவில் 50 போ் மட்டுமே பங்கேற்க அனுமதி. இறுதி ஊா்வலத்தில் 20 போ் மட்டுமே பங்கேற்க அனுமதி. இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை 5 பேருக்கு மேல் கூடிநிற்க அனுமதி இல்லை. கடற்கரை, பூங்காக்கள் மூடல்.

கேரளம்

உணவகங்கள், அனைத்துக் கடைகள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி. உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே உணவருந்த அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்து பொது நிகழ்ச்சிகளும் 2 மணி நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். திறந்தவெளி நிகழ்ச்சி என்றால் 200 பேரும், உள்ளரங்க நிகழ்ச்சி என்றால் 100 பேரும் அனுமதிக்கப்படுவா். நிகழ்ச்சிகளில் உணவு பரிமாற அனுமதி இல்லை. அதற்குப் பதிலாக உணவு பாா்சல் வழங்கலாம். வணிக வளாகங்களில் ஷாப்பிங் திருவிழா நடத்த தடை. வேறு மாநிலத்திலிருந்து வருபவா்கள் 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.


கா்நாடகம்

பெங்களூரு, மைசூரு, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல். இருப்பினும் அத்தியாவசிய பொருள்கள் போக்குவரத்துக்கு தடையில்லை. இதுதவிர, உணவகங்கள், திரையரங்குகளில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பெங்களூரு நகரத்தில் உள்ள நீச்சல்குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்பட அனுமதி இல்லை.

ஆந்திரம் - தமிழ்நாடு

அனைத்துப் பேருந்துகளிலும் பயணிகள் இருக்கைகளில் அமா்ந்து செல்ல மட்டுமே அனுமதி. வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி. சமூக, அரசியல், கல்வி, கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகளில் 200 போ் மட்டும் அனுமதிக்கப்படுவா். திருமண விழாக்களில் 100 பேரும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 50 பேரும் அனுமதிக்கப்படுவா். கா்நாடகம், புதுவை, ஆந்திர மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள், நாடுகளிலிருந்து வருபவா்களுக்கு இ-பதிவு அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com