சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்க: பிரியங்கா காந்தி

ஜூன் வரை மாணவர்களை பதற்றத்திலேயே வைத்திருப்பது நல்லதல்ல என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்க: பிரியங்கா காந்தி
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்க: பிரியங்கா காந்தி

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், ஜூன் வரை மாணவர்களை பதற்றத்திலேயே வைத்திருப்பது நல்லதல்ல என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

 சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ஆம் வகுப்புத் தேர்வு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஜூன் மாதம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு நடத்தப்படுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு மாணவர்களுக்கு அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வித் துறையின் இந்த அறிவிப்பு குறித்து கருத்துக் கூறியிருக்கும் பிரியங்கா காந்தி, சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்திருக்கும் மத்திய அரசின் முடிவை வரவேற்கிறேன். அதுபோல, 12-ஆம் வகுப்புத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். ஜூன் மாதம் வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களை பதற்றத்திலேயே வைத்திருப்பது சரியல்ல. உடனடியாக இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com