கொல்கத்தா செல்லும் போது இது மிகவும் அவசியம்

மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள், இந்த மாநிலங்களிலிருந்து வருவதாக இருந்தால், 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என்று மாநில அரசு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொல்கத்தா விமான நிலையத்தின் சுட்டுரைப் பக்கத்தில், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து கொல்கத்தா விமான நிலையம் வரும் பயணிகள் கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் நேற்று ஒரே நாளில் 1,200 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திலும் நேற்று 4,800 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com