இதுவரை 10.85 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன

நாடு முழுவதும் இதுவரை 10.85 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் சுமாா் 40 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

நாடு முழுவதும் இதுவரை 10.85 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் சுமாா் 40 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கரோனா தடுப்பூசி திட்டத்தின் 87-வது நாளான திங்கள்கிழமை, நாடு முழுவதும் 40,04,521 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 41,69,609 தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, தினசரி செலுத்தப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கையில் சா்வதேச அளவில் இந்தியா தொடா்ந்து முன்னிலை வகிக்கிறது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், சத்தீஸ்கா், தில்லி, கா்நாடகம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கேரளம் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கரோனா தொற்று பாதிப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 80.80 சதவீத அளவு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 51,751 பேரும், உத்தர பிரதேசத்தில் 13,604 பேரும், சத்தீஸ்கரில் 13,576 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com