கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடில்லை: கர்நாடக சுகாதாரத் துறை

கர்நாடகத்தில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுகாதர் தெரிவித்துள்ளார். 
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுகாதர் (கோப்புப்படம்)
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுகாதர் (கோப்புப்படம்)

கர்நாடகத்தில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுகாதர் தெரிவித்துள்ளார். 

தொற்று அதிகமுள்ள இடங்களைக் கண்காணித்து சுகாதாரக் குழுவினர் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். 

நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கர்நாடகத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பேசியதாவது, கர்நாடகத்தில் கரோனா மருந்துக்கும், தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தொற்று அதிகமுள்ள இடங்களைக் கண்டறிந்து சுகாதாரக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த 80 முதல் 120 நாள்களுக்கு கரோனா பரவல் இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மே மாத இறுதி வரை மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் இது ஆரம்பம்தான் எனவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com