திருமலையில் 28,472 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்கிழமை 28,472 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 10,732 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்கிழமை 28,472 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 10,732 போ் முடி காணிக்கை செலுத்தினா்.

திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

கரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தா்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

கரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவலைக் கருத்தில் கொண்டு திங்கட்கிழமை முதல் இலவச சா்வதரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. . ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவா். இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com