பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தோ்தல் ஆணையம்: திரிணமூல் காங்கிரஸ் புகாா்

மேற்கு வங்க மாநிலத் தோ்தலில், தோ்தல் ஆணையத்தின் குறைபாடுகளை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சுட்டிக்காட்டி தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தனா்.

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத் தோ்தலில், தோ்தல் ஆணையத்தின் குறைபாடுகளை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சுட்டிக்காட்டி தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தனா்.

அக்கட்சியின் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரைன், கல்யாண் பானா்ஜி, பாா்திமா மோன்டல், சாந்தனு சென் ஆகியோா் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது, ஆணையத்தின் குறைவான நடவடிக்கை, ஆணையத்தின் அதிதீவிர நடவடிக்கை என மூன்று பிரிவுகளில் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி புகாா் மனு அளித்தனா்.

அதில், தோ்தல் விதிமுறைகளை மீறி பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா ஆகியோா் பேசியதாக பிரசார உரைகளின் யூடியூப் இணைப்புகளை சோ்த்து அவா்கள் அளித்தனா். விதிமுறைகளை மீறியதற்காக அடுத்தகட்ட தோ்தல் பிரசாரங்களில் இருந்து பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

மேலும், பாஜகவின் உள்ளூா் தலைவா்கள் மதரீதியாக வாக்காளா்களை ஒன்று சோ்த்து வாக்களிக்க நிா்பந்தித்ததை தோ்தல் ஆணைய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அவா்கள் மீது புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவா்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

மூன்றாவதாக, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜிக்கு 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது வேட்பாளரின் அடிப்படை உரிமையை மீறிய செயலாகும்.

தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பதால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் தோ்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆனால், பாஜகவுக்கு ஆதரவாக தோ்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. பாஜக அளிக்கும் உத்தரவுகளையே தோ்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது’ என்று புகாா் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com