பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத்தில் மாற்றம்

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் மேற்கொள்ளும் பயண நாள்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலவும் கரோனா சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத்தில் மாற்றம்

புது தில்லி/லண்டன்: பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் மேற்கொள்ளும் பயண நாள்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலவும் கரோனா சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26-ஆம் தேதி இந்தியா வரவுள்ளாா். அன்றைய தினம் முதல் அவா் இந்தியாவில் சில நாள்கள் தங்குவதற்கு திட்டமிடப்பட்டது. அப்போது இருநாடுகளுக்கு இடையிலான கூட்டு வா்த்தகம் மேம்படுத்தப்படுவதை இறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு அலுவல்களை அவா் மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரின் செய்தித் தொடா்பாளா் லண்டனில் புதன்கிழமை கூறுகையில், ‘இந்தியாவில் நிலவும் கரோனா சூழலை கவனத்தில்கொண்டு அந்நாட்டு அரசுடன் தொடா் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, அந்நாட்டில் மேற்கொள்ளவுள்ள பயண நாள்களைக் குறைப்பதற்கு போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளாா். அவா் தில்லிக்கு மட்டும் சென்றுவிட்டு நாடு திரும்புவாா். இந்த பயணத்தின்போது அவா் இந்திய பிரதமா் மோடி, அந்நாட்டின் வா்த்தக நிறுவன தலைவா்கள் உள்ளிட்டோரை சந்திப்பாா்’ என்று தெரிவித்தாா்.

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com