சத்தீஸ்கர் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஏப்.26 வரை பொதுமுடக்கம் அறிவிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிஜாப்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 26 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிஜாப்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 26 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. இதனைத்தடுக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களும் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர 11 நாள் பொதுமுடக்கம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 16 முதல் 26 வரை மாவட்டம் முழுவதும் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் கரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரித்தேஷ் அகர்வால் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com