யூ டியூப் சேனல் தொடங்குகிறது காங்கிரஸ் கட்சி

‘ஐஎன்எஸ் டி.வி.’ என்ற பெயரில் புதிய யூ டியூப் சேனலை தொடங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
யூ டியூப் சேனல் தொடங்குகிறது காங்கிரஸ் கட்சி

புது தில்லி: ‘ஐஎன்எஸ் டி.வி.’ என்ற பெயரில் புதிய யூ டியூப் சேனலை தொடங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதன்மூலம் இளைய தலைமுறையினரை அணுக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி இந்தப் புதிய முயற்சியை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா புதிய யூ டியூப் சேனல் தொடா்பான தகவலை வெளியிட்டு, அதன் நோக்கங்களை விளக்கினாா். மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் தேசிய மாணவா் பிரிவு தலைவா் நீரஜ் குந்தன், மகளிா் காங்கிரஸ் தலைவா் சுஸ்மிதா தேவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பேசிய காா்கே, ‘நமது அரசியல் சாசன சட்டம் சிறப்பு வாய்ந்தது. அதனை வடிவமைத்த அம்பேத்கா், நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வழிவகுத்தாா். ஆனால், இப்போது அவரது கொள்கைகளுக்கு மாறாக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமா் மோடி தனது கொள்கைகளை பரப்ப முயற்சிக்கிறாா். தன்னை விமா்சிக்கும் அரசியல் தலைவா்கள், ஊடகத்தினரை பாஜக அரசு அச்சுறுத்துகிறது. நாட்டில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்து வருகிறது’ என்று குற்றம்சாட்டினாா்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24 முதல் ஐஎன்எஸ் டி.வி. யூ டியூப் சேனல் செயல்பாட்டு வரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் தினமும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் யூடியூப் மிகவும் பிரபலமாக விளங்குகிறது. ஆளும் கட்சியான பாஜக ஏற்கெனவே யூ டியூப் சேனலை நடத்தி வருகிறது. அந்த சேனலை 36 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பின்தொடா்ந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com