இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு நல்லிணக்க பயணம்

இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையிலான நெருக்கமான கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ரான்விஜய்
இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு நல்லிணக்க பயணம்

கொழும்பு/புது தில்லி: இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையிலான நெருக்கமான கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ரான்விஜய் நீர்மூழ்கிக் கப்பல், இலங்கைக்கு 3 நாள்கள் நல்லிணக்க பயணமாக புதன்கிழமை சென்றடைந்தது.
இதுகுறித்து இந்திய தூதரகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டின் புனித நிகழ்வான "அவருடு' தினத்தையொட்டி,  இந்திய கடற்படைக் கப்பல் கொழும்புக்கு வருவதன் மூலம், இலங்கை மக்களுக்கு ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான செய்தியைத் தாங்கி 
வருகிறது.
இந்தியாவும் இலங்கையும் பாரம்பரியமாக ராணுவம் மற்றும் பாதுகாப்பில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு, பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற்று வருகின்றன. தற்போது இந்தக் கப்பலின் வருகையால் இரு நாடுகளுக்கிடையிலான நட்பில் மேலும் நெருக்கமும், கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான மற்றொரு படியாகவும் இது விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ராஜபுத்திர வம்சத்தினரின் நினைவாக பெயர் சூட்டப்பட்ட இந்தியாவின் ஐந்தாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் ரான்விஜய்யில், ஏவுகணைகளை அழிக்கும் கருவிகளும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் கேப்டன் நாராயணன் ஹரிஹரன் தலைமையில் அங்கு சென்றடைந்துள்ளது. அவர், மேற்கு கடற்படை பகுதியின் தளபதியான டபிள்யூயுடிஇஎம் சுதர்சனாவை சந்தித்து, வியாழக்கிழமை இந்திய அமைதி காக்கும் படையின் (ஐபிகேஎஃப்) நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என கொழும்பில் இருந்து வரும் செய்திஅறிக்கை தெரிவிக்
கிறது.
இந்திய-இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக 1987 முதல்1990-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரில் ஐபிகேஎஃப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com