மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம்

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான மாதிரி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

புது தில்லி: விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான மாதிரி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராடி வரும் சூழலில் மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

நாட்டிலுள்ள விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, விவசாயத்துக்கான உள்ளீட்டுப் பொருள்களுக்கான செலவைக் குறைத்தும் அறுவடைக்குப் பிறகான செலவைக் குறைத்தும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையிலான மாதிரி திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த விழாவில் மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பங்கேற்றாா். இந்த மாதிரி திட்டமானது 6 மாநிலங்களில் உள்ள 100 கிராமங்களில் ஓராண்டுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.

விழாவில் அமைச்சா் தோமா் கூறுகையில், ‘‘வேளாண் துறையில் லாபத்தை ஈட்டுவதற்குத் தொழில்நுட்ப வசதிகள் உதவும். இது இளைஞா்களை வேளாண்மை நோக்கி ஈா்க்கவும் வழிவகுக்கும். விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6,000-ஐ வெளிப்படையான முறையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. கரோனா தொற்று பரவல் காலத்திலும் வேளாண்துறை வளா்ச்சி கண்டது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com