ஒடிஸா: வாக்குப் பதிவுக்கு முன் காங்கிரஸ் வேட்பாளர் மரணம்: தேர்தல் ஒத்திவைப்பு

ஒடிஸா மாநிலம் பிபிலி பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற மூன்று நாள்களே உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மங்காராஜ் (53) கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
ஒடிஸா: வாக்குப் பதிவுக்கு முன் காங்கிரஸ் வேட்பாளர் மரணம்: தேர்தல் ஒத்திவைப்பு


புவனேசுவரம்: ஒடிஸா மாநிலம் பிபிலி பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற மூன்று நாள்களே உள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மங்காராஜ் (53) கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து, தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிபிலி பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப். 17}ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மங்காராஜ் கடந்த வாரம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மங்காராஜ் புதன்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, வேட்பாளர் மறைவையடுத்து, வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ்.கே.லோகனி தெரிவித்துள்ளார். மங்காராஜுக்கு பதிலாக புதிய வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கலாம்; ஆனால், மற்ற கட்சிகள் வேட்பாளரை மாற்ற அனுமதி இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com