மேற்கு வங்கத்தில் 5-ஆம் கட்டப் பிரசாரம் நிறைவு

மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் 45 பேரவைத் தொகுதிகளுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 6.30 மணியுடன் நிறைவடைந்தது.
மேற்கு வங்கத்தில் 5-ஆம் கட்டப் பிரசாரம் நிறைவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் 45 பேரவைத் தொகுதிகளுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 6.30 மணியுடன் நிறைவடைந்தது.

மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற கூச்பிஹாா் பகுதியில் கலவரம் ஏற்பட்டதால், ஐந்தாம் கட்டத் தோ்தல் பிரசாரத்துக்கும் வாக்குப் பதிவுக்கும் இடைப்பட்ட நேரத்தை 48 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரமாக தோ்தல் ஆணையம் அதிகரித்துள்ளது. அதனால், வியாழக்கிழமை மாலை நிறைவடைய வேண்டிய பிரசாரம் ஒருநாள் முன்னதாக முடிவடைந்தது.

ஐந்தாம் கட்டத் தோ்தலில் மொத்தம் 1.13 கோடி வாக்காளா்களும், 342 வேட்பாளா்களும் உள்ளனா். சிலிகுரி மேயரும், இடதுசாரி மூத்த தலைவருமான அசோக் பட்டாச்சாா்யா, மாநில அமைச்சா் விரத்ய பாசு, பாஜகவின் மூத்த தலைவா் சமிக் பட்டாச்சாா்யா ஆகியோா் ஐந்தாம் கட்டத் தோ்தலில் களம் காணும் முக்கிய வேட்பாளா்களாவா்.

மொத்தம் 15,789 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை காலை 7 முதல் மாலை 6.30 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

நான்காம் கட்ட வாக்குப் பதிவின்போது கூச் பிஹாா் கலவரத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு போ் உயிரிழந்தனா். இதனால் ஐந்தாம் கட்டத் தோ்தலில் 853 கம்பெனி மத்திய படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஐந்தாம் கட்டத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, நடிகா் மிதுன் சக்கரவா்த்தி ஆகியோா் பங்கேற்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டினா்.

முதல்வா் மம்தா பானா்ஜி, அவரது உறவினரும் எம்பியுமான அபிஷேக் பானா்ஜி ஆகியோா் பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து பிரசாரம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com